தீவிர பிரச்சாரம்

X
ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் வழிகாட்டுதல்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை பகுதியில் கடைக்காரர்கள், வீடுகளில் உள்ள வாக்கார்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்பகுதி விவசாயிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள், சம்பத் நகர் பகுதி குடியிருப்பு வாசிகள், நசியனுார் சாலைப்பகுதியில் ஓட்டு சேகரித்து உழவர் சந்தைக்கான தேவைகள், கூடுதல் வசதிகள், அப்பகுதிக்கான பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பேசியதாவது:தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை, விளைவித்த காய்கறிகள், பழங்களை விவசாயிகளே நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய முதல்வரும் தற்போது புதிதாக பல ஊர்களில் உழவர் சந்தையை விரிவுபடுத்தி உள்ளார். பொதுமக்களுக்கு இயற்கையான, விலை குறைந்த காய்கறிகள் கிடைக்கிறது. அதுபோல, பூமாலை வணிக வளாகம் உட்பட பல்வேறு வாய்ப்புகளை பொதுமக்கள், வியாபாரிகளுக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். உழவர் சந்தை மேம்படுத்தவும், கூடுதல் வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பத் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பல்வேறு ‘பிளாக்குகள்’ பழுதடைந்ததால் அகற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில் புதிய குடியிருப்புகள் விரைவில் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ளவர்கள் படித்து பயன் பெறும் வகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவீன பிரமாண்ட நுாலகம் அமைக்க, சமீபத்தில் ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார்.காளிங்கராயன் விடுதி முதல் குமலன்குட்டை வரையிலான பகுதியில் போக்குவரத்து நெரிசல், கலெக்டர் அலுவலகம் எதிரே சம்பத் நகர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கலெக்டர் அலுவலகம் முன் ரவுண்டானாவுடன், சாலை விரிவாக்கத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவு பெறும்போது, போக்குவரத்து சீராவதுடன், வாகன நிறுத்த வசதியும், விபத்தும் குறையும். ஈரோடு பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ரவுண்டானா முதல் பெருந்துறை சாலை, மீனாட்சிசுந்தரனார் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வணிகர்கள், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்று, பாதிப்பு இன்றி உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிகள் தொடர, தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டுப்பதிவு செய்யுங்கள்.இவ்வாறு பேசினார். மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர் செல்லபொன்னி உடட்பட பலர் உடன் சென்றனர்.
Next Story

