ஜெயங்கொண்டம் அருகே கோயிலை வட்டமிட்ட கருடன் .ஊரே வியந்து பார்த்து பக்தி பரவசத்தில் கரகோஷம்.*

X
அரியலூர், பிப்.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல வருடங்கள் ஆகிறது இந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கும்பாபிஷேக விழாவினை முன் நின்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோ பூஜை, வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக தொடங்கியது. மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் தெளிக்கப்பட்டது. உடையார்பாளையம் ஜமீன்தார் நல்லாசியுடன் நடைபெற்ற விழாவில் ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தரான போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் பரந்தாமன் நாட்டார் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.புனித நீர் ஊற்றுவதற்கு முன்பாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கோயிலுக்கு மேல் கருட பகவான் வட்டமிட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கருட பகவனை பார்த்து பக்தர்கள் வணங்கி பக்தி கரகோஷங்கள் எழுப்பினர்.
Next Story

