ஆரணி ஸ்ரீபாலமுனிஸ்வரன் ஆலயத்தில் ஊரணி பொங்கலிடுதல் திருவிழா.
ஆரணி நகரம், ஆரணிப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால முனிஸ்வரர் ஆலயத்தில் ஊரணி பொங்கலிடுதல் திருவிழா ஞாயிறு, திங்களள்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஊரணி பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பம்பை மேளத்துடன் சுவாமி வர்ணிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் திங்கள்கிழமை திருவிழா முன்னிட்டு மாபெரும் கறி விருந்து முன்னிட்டு கறி சாப்பாட்டினை சுவாமி முன்வைத்து படையல் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது. ஏற்பாடுகளை ஆரணிப்பாளையம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Next Story



