ஆட்சியர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்பாடாத காரணத்தால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டது...

ஆட்சியர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்பாடாத காரணத்தால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டது...
X
ஆட்சியர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்பாடாத காரணத்தால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டது...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்பாடாத காரணத்தால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டது... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரூபாய் 9 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செல்வதாக காரணத்தால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் முதியோர்கள் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் பொதுமக்கள் அங்குள்ள கடைகளில் ரூபாய் 20 விலைக்கு கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டுமென மனு அளிக்க வந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story