ஆம்பூர் அருகே கிராம நிருவாக அலுவலரை கண்டித்து முற்றுகை போராட்டம்

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தங்களது கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல், தங்களது கிராமத்திலேயே வேறு கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்க்கொண்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுக்கையிட்டு கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்... திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தும் வரும் நிலையில், மின்னூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அளித்தும், இதுவரையில், மின்னூர் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல், மாவட்ட நிர்வாகம் வெளிகிராமத்தை சேர்த்த மக்களுக்கு, மின்னூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்தவாகவும், இதனை கண்டித்து, மின்னூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன் தலைமையிலான கிராம மக்கள் மின்னூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்...
Next Story

