ஜல்லிக்கட்டு போட்டியில் மாயமான மாடு மீட்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் மாயமான மாடு மீட்பு
X
ஜல்லிக்கட்டு போட்டியில் காணாமல் போன மாடு மூன்று நாட்களுக்குப் பிறகு உரியவரிடம் சேர்க்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வளையக்காரனூர் பகுதியில் தனியார் கல்லூரி பின்புறம் கடந்த சனிக்கிழமை அன்று குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். நானூருக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று காளைகளை அடக்கினர் . காலை துவங்கி மாலை வரை இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில், ஜல்லிக்கட்டு வாடிவாசலில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றது. இதன்பிறகு மாடுகளை அழைத்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் சேர்ந்த நபர் ஒருவரின் ஜல்லிக்கட்டு காளை திடீரென அங்கிருந்து மாயமானது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள் குமாரபாளையம் பகுதி முழுவதும் கிராமப்புற பகுதியில் வயல்வெளிகளில் விவசாய நிலங்களில் ஜல்லிக்கட்டு மாட்டை தேடினர்.. மேலும் சமூக வலைத்தளங்களிலும் மாடு காணாமல் போனதாக பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில் பள்ளிபாளையம் ஒன்றியம் சமயசங்கிலி கிராமத்தில் நேற்று அந்த மாடு சுற்றித் தெரிவதாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அப்பகுதி சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.. இதனையடுத்து உரிமையாளர்கள் மாட்டை அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்..
Next Story