திருப்பத்தூர் பாட்டிக்கு சாப்பாடு கொடுத்த பேரன் மீது கொலைவெறி தாக்குதல்,கணவன் மனைவி வெறிச்செயல், படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருப்பத்தூர் பாட்டிக்கு சாப்பாடு கொடுத்த பேரன் மீது கொலைவெறி தாக்குதல்,கணவன் மனைவி வெறிச்செயல், படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாட்டிக்கு சாப்பாடு கொடுத்த பேரன் மீது கொலைவெறி தாக்குதல்,கணவன் மனைவி வெறிச்செயல், படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி பகுதியை சேர்ந்த பாப்பையன் மனைவி சின்னத்தாய் (85) இவர்களுக்கு காமராஜ், காளியப்பன், சின்னதம்பி என மூன்று மகன்களும் சுலோக்சனா, சுகுனா, செல்வி ஆகிய மகள்கள் என ஆறு குழந்தைகள். அனைவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் பாப்பையன் உயிரழந்துள்ளார். இதனையெடுத்து சின்னத்தாய் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக முதல் மகள் வாணியம்பாடியில் உள்ள சுலோக்சனா என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னதாயின் இரண்டாவது மகன் காளியப்பன் தனது தாயை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது நேற்று சுலோக்சனாவின் மகன் கணேசன் (39)என்பவர் தனது வீட்டிற்கு பாட்டியை சாப்பிட அழைத்து வந்துள்ளார். இதனை அறிந்த காளியப்பன் அவரது மனைவி வார்டு நம்பரான செல்வி ஆகியோர் கிரிக்கெட் பேட் கொண்டு என்னுடைய தாயை ஏன் அழைத்து வந்தாய் என கூறி சராமரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story