புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றுக் கொண்டார்..

X
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று ( 03.02.2025 ) வி.மோகனசந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இயக்குநர், பேரிடர் மேலாண்மை துறையிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு சுகாதாரத்திட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராகவும், முதலமைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளாராகவும், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராகவும், கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பணியிடத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரத்தில் வருவாய் கோட்டாட்சியராகவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story

