அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தரக்கோரி மனு

X

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தரக்கோரி அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் குளத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜகாபட்டியில் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேற்படி கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான நகர பேருந்து முழுமையான மின் விளக்கு வசதி மற்றும் இங்கு வாழும் மூத்த குடிமக்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படாமலேயே உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் மேற்படி கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருமாறு அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் மனு அளித்தனர்.
Next Story