இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்தில் ஒருவர் பலி

X
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் அய்யனார்,18; இவர் மேல்வாலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி் ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டீன்,15; பிரசாந்த் ஆகி யோருடன் கண்டாச்சிபுரத்தில் இருந்து மேல்வாலைக்க பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ஜஸ்டின் பைக்கை ஓட்டி வந்தார். மேல்வாலை அருகே வந்தபோதுனா எதிரே வந்த பல்சர் பைக் மீது மோதியது. அதில், கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்து வரும் ஸ்டாலின் மகன் ஜஸ்டின்,15; சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த பல்சர் பைக் ஓட்டி வந்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலாஜி,22; பிரசாந்த் மற்றும் அய்யனார் ஆகிய மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

