பேருந்தில் சிக்கி வியாபாரி பலி

பேருந்தில் சிக்கி வியாபாரி பலி
X
பலி
திருக்கோவிலுார் அடுத்த வீரட்டக்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி, 59; திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் வேலுாரில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி முறுக்கு விற்றுக் கொண்டிருந்தார். டிரைவர் திடீரென பஸ்சை ஸ்டார்ட் செய்யவே அரசு மருத்துவமனை அருகே முன்பக்க படி வழியாக கீழே இறங்கியபோது, தவறி விழுந்து பஸ் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story