பிரச்சாரம் ஓய்ந்தது

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓய்ந்தது பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், கடந்த, ஜன., 7ல் அறிவிக்கப்பட்டது. தேர் தலில், தி.மு.க., நா.த.க., கட் சியினர் உட்பட, 46 வேட்பா ளர்கள் போட்டியில் உள்ளனர். பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மாலை, 4:55 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் அமைச்சர் முத்து சாமி தலைமையில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் பிர சாரத்தை நிறைவு செய்தார். நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.கே.வி.சாலை கிருஷ்ணா தியேட்டர் அருகே நிறைவு செய்தார். மாலை, 6:00 மணியுடன் பிரசாரத்துக் காக வெளியூரில் இருந்து வந்தவர்கள் வெளியேறினர். அத்துடன் விடுதிகள், மண் டபங்கள், சமுதாய கூடம் போன்ற இடங்களில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளார்களா என போலீசார், தேர்தல் பிரி வினர் ஆய்வு செய்தனர்.அதேநேரம், மாலை, 6:00 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை பிர சாரம், மக்கள் சந்திப்பில் எவ ரேனும் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் அல்லது 2 ஆண் டுகள் சிறை தண்டனை விதிக் கப்படும், என தேர்தல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.நாளை காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மொத்தமுள்ள, 237 ஓட்டுச்சாவடிகளில், ஒன்பது ஓட்டுச்சாவடி பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள், 300 பேர், பட்டா லியன் போலீசார், 450 பேர், ஆயுதப்படை போலீஸ், 250 பேர், சட்டம் ஒழுங்கு போலீஸ், 1,678 , 2,678 போலீசார் ஈடுபடுகின்றனர். எஸ்.பி., ஜவகர் தலைமையில், 3 ஏ.டி.எஸ்.பி.,க்கள் தலை மையில் அதிவிரைவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவில், 10 டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். ஓட்டுச்சாவடி பணியில், 1,194 அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.இன்று காலை, ஓட்டுச் சாவடி பணி அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, மின்னணு ஓட் டுப்பதிவு இயந்திரங்களுடன் சென்று சேர்வர்.
Next Story