மாவட்ட ஆட்சியரிடம் கூடலூர் வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புகார் மனு
கூடலூரில் வியாபார சங்கங்களுக்கு ஆதரவாக ஒரு சில அரசு அதிகாரிகள் சுற்றுலா வாகனங்களை அப்புறப்படுத்த உடந்தையாக இருப்பதாக கூறி இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் கூடலூர் வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புகார் மனு ................... நீலகிரி மாவட்டம் கூடலூர் உழவர் சந்தை முன்புறம் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தம் இடம் கடந்த 15 வருட காலமாக உள்ளது. இந்நிலையில் தற்போது நிரந்தரக்கடை வியாபாரிகளால் கூடலூர் நகர முழுவதும் வியாபாரிகள் சங்கத்தினரால் சாலையில் இருப்புறமும் அனுமதி இல்லாத கட்டிடம் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் வாகனங்களும் இருசக்கர வாகனமும் சாலையின் இருபுறமும் வாரக்கணக்கில் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் கையூட்டை பெற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், இதனால் கூடலூர் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் செலுத்தக்கூடிய சுற்றுலா வாகனங்களை அப்புறப்படுத்த வியாபாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,இதனால் சுற்றுலாவுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால், சுற்றுலா வாகனம் நிறுத்துமிடத்தை அப்புறப்படுத்த கூடாது என இன்று நீலகிரி மாவட்ட கூடலூர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
Next Story




