திடீரென பற்றி எரிந்த கார் உயிர் தப்பிய இரு பயணிகள்

திடீரென பற்றி எரிந்த கார் உயிர் தப்பிய இரு பயணிகள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நாள்தோறும் சரக்கு வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் பயணிக்க கூடிய பிரதான சாலையாக இருந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம்,கோவை,ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய இரண்டாவது மாற்றுப்பாதையாகவும்,முக்கிய அரசியல் பிரபலங்கள்,அரசு அதிகாரிகள் சென்று வரக்கூடிய முக்கிய பிரதான சாலையாகவும் உள்ளது. இந்த நிலையில் இன்று கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ள சக்கத்தா பகுதியில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் போது காரில் திடீரென புகை வந்துள்ளது. உடனே காரை இயக்கி சென்ற நபர் காரை நிறுத்தி இறங்கி பார்த்தப் போது தீ மலமலவென பற்றி எரியத் தொடங்கியது.உடனே காரில் பயணித்த மற்றொரு பயணியும் காரை விட்டு இறங்கி தப்பித்தனர். உடனே கோத்தகிரி  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் அடிப்படையில் தற்போது காரில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Next Story