விழுப்புரத்தில் இருசக்க வாகனங்கள் திருட்டு போலீசார் விசாரணை

விழுப்புரத்தில் இருசக்க வாகனங்கள் திருட்டு போலீசார் விசாரணை
X
விழுப்புரம் போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே உள்ள மோட்சகுளத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 27). இவர் தனலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகம் எதிரே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார்.பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.இதேபோல் விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (56) என்பவர்,விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு துணிக்கடை அருகில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த - போது அவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.இதுகுறித்து பிரேம்குமார், கமலக்கண்ணன் ஆகிய இருவரும் தனித்தனியாக விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story