சிறுத்தை, கருஞ்சிறுத்தை, அடுத்தடுத்து உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது....

சிறுத்தை, கருஞ்சிறுத்தை, அடுத்தடுத்து உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது....
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை, அடுத்தடுத்து உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.... கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகள் தேயிலை தோட்டங்கள் கொண்டதாக உள்ளது இதனால் சிறுத்தை கரடி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் வழக்கம்போல் இரவு நேரங்களில் கருஞ்சிறுத்தை சிறுத்தை கரடிகள் உலா வருவது அடிக்கடி இருந்து வரும் நிலையில்  இரவு நேரத்தில் அரை மணி நேர இடைவெளியில் முதலில் சிறுத்தை அதன் பின்பு கருஞ்சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடிக்கடி ஒரே பகுதியில் உலா வரும் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை அடர் வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story