ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் கைது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை போலீசார் அழைத்து சென்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.3) வந்த ஒரு சில இந்து அமைப்பை சார்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மதனகோபால் என்பவர் காவல்துறை கைது செய்த போது கோஷங்கள் எழுப்பியவாறு வாகனத்தில் ஏற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து மதுரை முனிசாலையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் மற்ற இருவரும் கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இது வரை 13 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story