கழுத்தை நெறித்து பணம் பறிக்க முயற்சி

கழுத்தை நெறித்து பணம் பறிக்க முயற்சி
X
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வியாபாரியை மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தடுத்து கழுத்தை நெறித்து பணம் பறிக்க முயற்சி
குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லபுரம் கிராமம் தாசல்நாயக்கனூர் வளைவு பகுதியில் இருந்து சூலபுரம் செல்லும்சாலையில் ஈசநத்தம் -புதூரை சேர்ந்த வியாபாரி கிருஷ்ணன்(வயது 70) ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு பைக்கில் வந்த இருவர் அவரை தடுத்து நிறுத்தி கழுத்தை இறுக்கி அவர் வைத்திருந்த பணத்தை பறிக்க முயற்சி செய்தனர். உடனடியாக அவர் பணத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கூடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். கூம்பூர் எஸ் புதூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை பிடித்து குஜிலியம்பாறை போலீசார் வசம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய உல்லியக்கோட்டையை சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story