பைக்கில் சென்ற பெண் கால்வாயில்விழுந்து பலி

X

உத்திரமேரூரில் வைக்கில் சென்ற பெண் கால்வாயில்விழுந்து பலி போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன ஆண்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி நிர்மலா, 56; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் உறவினர் ஊரான முறுக்கேரி கிராமத்திற்கு சென்றார். பின், அன்றிரவே மீண்டும் தன் பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அழிசூர் அலமோதி அம்மன் கோவில் அருகே வந்த போது, நிலைதடுமாறி சாலையோர கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நிர்மலா உயிரிழந்தார். பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story