மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்யை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பட்ஜெட்டில் தமிழ் நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும்.. எழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்யை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ் நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும்.. எழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் எ.இன்பராஜ்,ஒன்றிய செயலாளர் பி.பெரியசாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன்,கலையரசி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் இரா.எட்வின், கருணாநிதி,கோகுல கிருஷ்ணன்,ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், உட்பட பல கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேப்பூர் பேருந்து நிலையத்தில் குன்னம் வட்டச் செயலாளர் வி.செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.கே.ராஜேந்திரன் கண்டன உரையாற்றினர். ஆலத்தூரில் ஒன்றிய செயலாளர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என.செல்லத்துரை, மாவட்ட குழு உறுப்பினர் மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். வேப்பந்தட்டையில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.எம்.சக்திவேல் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.கே.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
Next Story