ஆழ்துளை குழாய் அடி பம்பை அகற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை மற்றும் பூங்கொத்து வழங்கும் போராட்டம்

X

ஆழ்துளை குழாய் அடி பம்பை அகற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை மற்றும் பூங்கொத்து வழங்கும் போராட்டம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி ஊராட்சி புதுவளவில் 40 வருடங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு அடி பம்பை இதன் அருகில் உள்ள மெய்யழகன் என்ற தனி ஒரு நபர் ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு இடித்து தரைமட்டம் செய்து விட்டார் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்த இரும்பு பைப்புகள் ஆழ்துளை கிணற்றின் அடி ஆழத்திற்கு சென்று விட்டது இதுகுறித்து ஊர் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்த பின்பு மெய்யழகனை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர் தவறுதலாக இது நடந்து விட்டது இதனை சரி செய்து தருவதாக இரண்டு மாதத்திற்கு முன்பு எழுத்துப்பூர்வமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு பதில் அளித்து இருந்தார் இதன்பிறகு இரண்டு மாத காலம் ஆன பின்பும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கு கடைபிடித்து வருகிறது என இன்று போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பாக அந்த ஆழ்துளை கிணற்றின் மேல் அடிபம்பு மட்டும் வைக்கப்பட்டு கான்கிரீட் கலவை ஊற்றப்பட்டது அதன் உள் இரும்பு பைப்புகளோ அடி பம்போ வைக்காமல் கண்துடைப்பு வேலை செய்தது எதனை எடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நான்கு மாத காலமாக மெத்தனப் போக்கில் செயல்பட்ட ஊராட்சி அதிகாரிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் பி.தேவராஜன் தலைமையில் பாராட்டி மலர் கொத்து மற்றும் மாலை அணிவித்து வாழ்த்தும் போராட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது. பெரிய மணலி பேருந்து நிறுத்தத்தின் அருகே இருந்து பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்மணி.எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ். மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனியம்மாள். ஏலூர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதிமணி. ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைசாமி . பூபதிமுருகன். விஜய். கிளைசெயலாளர் சாந்தி. உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் போராட்டக்காரர்கள் மாலை அணிவிக்க சென்ற போது அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர் பின்னர் எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் அப்பொழுதுதான் போராட்டம் வாபஸ் பெற முடியும் என்று கூறிய பின்னர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த பின்னர் வரும் 11ம் தேதிக்குள் சரி செய்வதாக எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. போராட்டம் காரணமாக பிரிய மணலி ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story