சிவகிரியில் புதியதாய் அமைக்கப்பட்ட சாலையால் மக்கள் அவதி

X

புதியதாய் அமைக்கப்பட்ட சாலையால் மக்கள் அவதி
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சங்குபுறம் கிராமத்தில் முருகன் கோவில் முன்பு சமீபத்தில் சிமெண்ட்சாலை அமைக்கப்பட்டது. இந்த சிமெண்ட் சாலை வடக்கு திசையை நோக்கி செல்லக்கூடிய தெருவில் பழைய சாலையும் சந்திக்கும் இடத்தில் பழைய ரோட்டுக்கும் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் தளத்திற்கும் இடைப்பட்ட பகுதி பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர்தேங்கி சேரும் சகதியுமாக மாறி மக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை பார்வையிட்டு தண்ணீர் அப்புறப்படுத்தி அந்தப் பள்ளத்தை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story