சிவகங்கை மாவட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

X
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பணியாளர்களுக்கு, இடைத்தேர்தல் தினமான 05.02.2025 அன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை தொழிலாளர் ஆணையர் அவர்களின் செய்தி குறிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 05.02.2025 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், 1951ஆம் வருட மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் பிரிவு 135(B)-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவுரைகளின்படி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவுநிறுவனங்கள்,தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போகக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றம் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான 05.02.2025 (புதன்கிழமை) அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வேலையளிப்பவர்கள் வழங்கிட வேண்டும். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பணியாளர்களுக்கு, இடைத்தேர்தல் தினமான 05.02.2025 அன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தொழிலாளர்கள் புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக, சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டிரோடு, காஞ்சிரங்காலில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (அமலாக்கம்) அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு இடைத்தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம் 04575-240521 என்ற தொடர்பு எண்ணிலும், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளரை 9840849802 என்ற அலைபேசி எண்ணிலும், காரைக்குடி தொழிலாளர் உதவி ஆய்வாளரை 9842584526 என்ற அலைபேசி எண்ணிலும், திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளரை 8072260894 என்ற அலைபேசி எண்ணிலும், தேவகோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளரை 9363764128 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story

