காஞ்சிபுரத்தில் வாலிபரை வெட்டியர் கைது

X

ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை வெட்டிய நபர் கைது செய்து சிறையில் அடைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்துாரைச் சேர்ந்தவர் நரேஷ், 30. கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 28. இருவர் மீதும் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 26ம் தேதி இரவு தெரேசாபுரம் டாஸ்மாக் அருகே அமர்ந்து, இருவரும் மது அருந்திவிட்டு, நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரேஷின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். அக்கம்பக்கத்தினர் நரேஷை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த அருணை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story