பணி நியமனம் வழங்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் மயக்கம்

தேர்வில் வெற்றி பெற்று தற்போது வரை பணி நியமனம் வழங்கப்படாத பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம்
2023 -24 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையினை தமிழக அரசு வெளியிட்டு, தேர்வு நடைபெற்று, அத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது வரை பணி நியமனம் வழங்கப்படாதவர்கள் தங்களுக்கு பணி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கருப்பு பட்டை அணிந்து ஒரு நாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கை காரணம் காட்டி தங்களது பணி நியமனத்தை கால தாமதம் செய்யக்கூடாது, மூன்று முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பணி நியமனத்தை உடனடியாக அரசாணையிட்டு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியை கலைவாணி வெயிலின் காரணமாக திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் போராட்ட களத்தில் சிறிது நேரம் அசாதாரண சூழல் ஏற்பட்டது.
Next Story