கூத்தூர் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

கூத்தூர் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
X
திருச்சி கூத்தூர் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கூத்தூர் பகுதியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட வெங்கங்குடி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர் தொடர்ந்து அப்பகுதியில் வீட்டு வரி உயர்வு 100 நாள் வேலை திட்ட பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்படும் என வலியுறுத்தி இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
Next Story