ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில பொறுப்பாளர் வன்னியராஜன் கைது செய்ய முயற்சி

X
திருப்பரங்குன்றத்தில் மலையை பாதுகாப்போம் என்ற அறவழிப் போராட்டத்திற்கு இந்து முன்னணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து முன்னணி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அங்கு செல்ல தயாராகி வந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்து முன்னணி யினர் ஆர்ப்பாட்ட அறிவிப்பு காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இந்து முன்னணியினர் யாரும் கலந்து கொள்ள தடை விதிக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில பொறுப்பாளர் வன்னியராஜன் நாகர்கோவிலில் இருந்து ரயில் மூலம் விருதுநகர் வந்தார். இவர் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அவரை ரயில் நிலையத்தில் கைது செய்வதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த நிலையில் வன்னியராஜனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைத்தனர். மேலும் வன்னியராஜன் நான் திருப்பரங்குன்றம் செல்லவில்லை எனவும் விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு தான் செல்வதாகவும் தன்னை கைது செய்வதற்கான முறையான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தாங்கள் வழங்க வேண்டும் என அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் இதனால் பரபரப்பு ஏற்பட்டது அதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு அவர் சென்றார் இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story

