மினி லாரி தீ

X

சென்னிமலை அருகே தேங்காய் நார் ஏற்றி சென்ற மினி லாரி மின் கம்பியில் உரசியதால் மினி லாரி முற்றிலுமாக தீயில் எரிந்தது.
சென்னிமலை அருகே தேங்காய் நார் ஏற்றி சென்ற மினி லாரி மின் கம்பியில் உரசியதால் மினி லாரி முற்றிலுமாக தீயில் எரிந்தது. பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோடு மருதம் நகரை சேர்ந்தவர் மணி என்கிற சண்முகம் (வயது 61). இவர் மினி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் சென்னிமலை அருகே ஈங்கூரை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் தேங்காய் குடோனில் இருந்து தேங்காய் நார் ஏற்றி கொண்டு பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு எடை நிலையத்தில் லாரியை எடை போட்டுவிட்டு ஈங்கூர் - செங்குளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்குளம் பிரிவு அருகே ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பியில் மணி என்கிற சண்முகம் ஓட்டி சென்ற மினி லாரி உரசியதால் லாரியில் இருந்த தேங்காய் நாரில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனை கண்ட மணி என்கிற சண்முகம் உடனடியாக மினி லாரியில் இருந்து கீழே இறங்கிவிட்டார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் மினி லாரியில் தேங்காய் நார் இருந்ததால் சித்தி மலம் அளவென பரவியதால் மினி லாரியும் முழுமையாக தீயில் எரிந்துவிட்டது. தேங்காய் நார் பாரத்தை உயரமாக மினி லாரியில் கட்டியதால் மின்கம்பியில் உரசி தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story