திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்று இன்று மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

X

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்று இன்று மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நிகழ்ச்சியில் 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்* திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் பெண் மாவட்ட ஆட்சியரும் ஐந்தாவது மாவட்ட ஆட்சியருமான சிவ சௌந்தரவல்லி இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அதனைத் தொடர்ந்து 110 மாற்று திறனாளிகளுக்கு மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கியதை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி ஸ்கூட்டர் ஒருவருக்கும் ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள் நான்கு பேருக்கு 2000 ரூபாய் மதிப்பிலான ஹை வாட்ச் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை சுமார் 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வாரந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் மதிய உணவு வழங்கி மகிழ்ந்தார்
Next Story