பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் திருத்தேர் விழா.
Paramathi Velur King 24x7 |4 Feb 2025 7:24 PM ISTபாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் திருத்தேர் விழா ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பரமத்திவேலூர், பிப்.5: பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் திருத்தேர் விழாவை முன்னிட்டு கடந்த 27- ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. திருத்தேர் விழாவை முன்னிட்டு கடந்த 27- ஆம் தேதி 12.30 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடி ஏற்று விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 3- ஆம் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப விமான புறப்பாடு மற்றும் ராஜ முடி சேவை, குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலை 4.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடைபெற்றது. திருத்தேரை பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், மாவட்ட நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், பேரூராட்சி தலைவர்கள் சோமசேகர், கருணாநிதி, துணை தலைவர் பெருமாள் ஆகியோர் வடம் பிடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேர் ஐ வடம் பிடித்து இழுத்தனர். இன்று 5- ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவம், வராக புஷ்கரணியில் தீர்த்தவாரி சகஸ்ரநானம், கெஜலட்சுமி வாகனம், வசந்த உற்சவம்,இன்று 5- ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவம், வராக புஷ்கரணியில் தீர்த்தவாரி சகஸ்ரநானம், கெஜலட்சுமி வாகனம், வசந்த உற்சவம், புஷ்ப யாகம் மற்றும் கருட வாகன புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது. திருத்தேர் பெரு விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story



