ஜெயங்கொண்டம் அருகே தேக்கு மகாகனி மரங்களை வெட்டிய சைக்கோ கைது.

X

ஜெயங்கொண்டம் அருகே தேக்கு மகாகனி மரங்களை வெட்டிய சைக்கோவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர்,, பிப்.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு வடவீக்கம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ரமேஷ் (வயது 48) விவசாயியான இவர் தனது சொந்த நிலத்தில் தேக்கு, மகாகனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன், (வயது 40) இவருக்கும், ரமேசுக்கும் நிலம் தொடர்பான வழித்தகராறில் பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது தாயார் இந்திராணி ஆகியோர் சேர்ந்து ரமேஷின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் மகாகனி மரங்களை அடியோடு வெட்டி சாய்த்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரமேஷ் அங்கு தனது நிலத்தில் மரம் முழுவதும் வெட்டி சாய்க்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்திராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வெங்கடேசன் அக்கிராமத்தில் தொடர்ந்து பொதுமக்களிடத்தில் சைக்கோ தனமாக நடந்து அடிக்கடி பிரச்சனை செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story