பவானிசாகர் பெண்களை தாக்கிய மூன்று பேர் கைது

X

பவானிசாகர் பெண்களை தாக்கிய மூன்று பேர் கைது
பவானிசாகர் பெண்களை தாக்கிய மூன்று பேர் கைது ஈரோடு மாவட்டம், பவானிசாகர், அகதிகள் முகாமில் வசிக்கும் செல்லையா மகன் தர்மராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, கமல் என்பவர் மது போதையில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. சன்னையில் கமல் என்பவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கமல் தனது நண்பர்களான திவ்யவாசன் மற்றும் ஜெயதீபன் ஆகியோருடன் தர்மராஜ் பாட்டி அரசு வீட்டுக்கு சென்று அங்கு இருந்த தர்மராஜை நீ என்னை விட சிறிய பையன் என்னை அடிக்கிறாயா என்று கமல் நண்பர்களுடன் தர்மராஜனை தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த தர்மராஜன் பாட்டி அரசு மற்றும் தர்மராஜனின் அத்தை பரிமளா ஆகியோரையும் கையால் தாக்கி உள்ளனர். இது குறித்து தர்மராஜ் பவானிசார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் மூவரையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டி வந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story