காங்கேயம் அதிமுக நகர ஒன்றியம் மற்றும் குண்டடம் வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது

X
திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் தொகுதிக்குட்பட்ட காங்கேயம் நகர ஒன்றியம், குண்டடம் வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் வருகின்ற 9ம் தேதி அன்னூர் வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியிலிருந்து சுமார் 50,000 பேர் செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. காங்கேயத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் புதிதாக 9பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பது மற்றும் 5 பூத்துகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 2 பகுதிகளில் நடைபெற்றது. குண்டடம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் முதலிபாளையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் 70-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காங்கேயம் அதிமுக ஒன்றிய நகரக கழகம் சார்பில் சென்னிமலை சாலையில் உள்ள என் எஸ் என் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் அன்னூரில் விவசாயிகள் சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவிற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் ஒன்றிய கழகச் செயலாளர் என்.எஸ்.என் நடராஜ், காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் வெங்கு ஜி மணிமாறன், மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம்,மாவட்ட கழகப் பொருளாளர் கே.ஜி. கே.கிஷோ குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ,பூத் கமிட்டி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கழக முன்னோடிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியிலிருந்து அன்னூர் செல்ல சுமார் 50,000 பேர் செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் கூறியது: திருப்பூர் மாநகர் மாவட்ட முழுவதும் ஒன்றியம், நகரம், பேரூராட்சி பகுதிகளில் ஆங்காங்கே ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.வரும் 09.02.2025 அன்று அன்னூருக்கு வர இருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் ஒப்பற்ற பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியாரை வரவேற்க இந்த கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட சார்பாக சுமார் 50,000 மேற்பட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் சென்று கலந்து கொள்வதாக தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான பணி மேற்பார்வை இடுவதற்கு தான் வந்திருக்கின்றேன் என்றார். மேலும் தமிழகத்திலே சட்ட ஒழுங்கு மரண படுக்கைக்கு சென்று இருக்கிறது. உதாரணமாக ஏடிஜிபி அவர்கள் நான் ஒரு சில நிமிடம் முன்னாடி என்னுடைய அலுவலகத்துக்கு சென்று இருந்தால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என்று சொல்லுகிற அளவுக்கு தமிழகத்திலே பெண்களுடைய பாதுகாப்பு உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையிலே இரவு நேரத்திலே காரிலே சென்று கொண்டிருந்த பெண்கள் திமுக கொடி கட்டிய திமுக காரர்களால் துரத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் உயிருக்கு பயந்து தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள கடுமையாக முயற்சி செய்துள்ளனர். இருந்தும் அவர்களைத் தொடர்ந்து துரத்தி அவர்களுக்கு பாதுகாப்பாற்ற நிலையில் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் புகாரை காவல்துறையினர் வாங்க மறுத்து சமரசம் செய்து வைத்து அனுப்பி விட்டனர். பின்னர் சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்பட்ட பின்னரே வழக்கு பதிவு செய்துள்ளனர் . அதிலும் உண்மையான குற்றவாளிகளை மறைத்து அண்ணா திமுக மீது பழியை போட நினைக்கின்றனர். இதே போல தான் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலே ஈடுபட்ட யார் அந்த சார்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. இப்படித்தான் திமுக ஆட்சியிலே சட்டம் ஒழுங்கு இருக்கிறது காவல்துறை என்று ஒன்று தமிழகத்திலே செயல்பாட்டில் உள்ளதா என்பது மிகப்பெரிய சந்தேகமாக மக்கள் மனதிலே இருக்கிறது என்றார்.
Next Story

