வெள்ளகோவிலில் கஞ்சா, போதை சாக்லெட்டுடன் வட மாநில தொழிலாளி கைது

வெள்ளகோவிலில் கஞ்சா, போதை சாக்லெட்டுடன் வட மாநில தொழிலாளி கைது
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.கிலோ 220 கிராம் கஞ்சா, 225 கிராம் கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கேயம் அருகே வெள்ளகோவில் காவல்துறையினர் மூலனூர் சாலையில் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குருக்கள் பாளையம் பிரிவு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.அந்த வாகனத்தில் இருந்த ஒரு பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் பத்ராஜ் மாவட்டம் ரிஷா புதூரைச் சேர்ந்த தற்போது வெள்ளகோவில் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வரும் பி.நில மணிமதன் (வயது 46) என்பது தெரியவந்தது. அவர் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு இங்கு தன்னுடன் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 220 கிராம் கஞ்சா, 225 கிராம் கஞ்சா சாக்லெட் மற்றும் ரொக்கம் ரூ.1,800 பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story