அரியலூரில் இம்மாதம் இறுதியில் புத்தகத் திருவிழா

அரியலூரில் இம்மாதம் இறுதியில் புத்தகத் திருவிழா
X
அரியலூரில் இம்மாதம் இறுதியில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.
அரியலூர்,பிப்.5- அரியலூரில் இம்மாதம் இறுதியில் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தினார். அரியலூரில் புத்தக் திருவிழா நடத்துவது தொடர்பாக மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழாவை நடத்தும் பொருட்டு, அதற்கான இடத்தினை தேர்வு செய்திட வேண்டும். 80}ககும் மேற்பட்ட முன்னனி புத்தகப் பதிப்பகங்களின் அரங்குகள், பொழுதுப் போக்கு அம்சங்கள், மருத்துவ முகாம்கள் ஏற்படுத்திடவும், மேலும் முன்னனி பேச்சாளர்களைக் கொண்டு, பட்டிமன்றங்கள் உள்ளிட்டவைகள் நடத்திடவும் மாவட்ட நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story