திருமானூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற புனித அருளானந்தர் அலங்கார தேர்பவனி.

X

அரியலூர் மாவட்டம், திருமானூர் புனித அருளானந்தர் ஆலய திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு தேர்பவனி நடைபெற்றது.
அரியலூர், பிப்.5- அரியலூர் மாவட்டம், திருமானூர் புனித அருளானந்தர் ஆலய திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு தேர்பவனி நடைபெற்றது. ஆலய திருவிழாவை முன்னிட்டு பிப்.2 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய பங்குதந்தை தங்கசாமி தலைமையில், திருமானூர் ஆலய பங்குதந்தை ஜான்விமல் பெலிக்ஸ் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பங்குதந்தையர்கள், அருட் சகோதரிகள் முன்னிலையில் ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிப்.3 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் மதுரை தூய மரியன்னை கலைமனைகள் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில், விளாங்குடி வீரமாமுனிவர் இயேசு சபை குழுமம் மற்றும் இயேசு சபை குருக்கள் முன்னிலையில் விழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அன்றிரவு 9 மணிக்கு மேல் மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அருளானந்தர் எழுந்தருள, தேர் புனிதப்படுத்தப்பட்டு திரளான பக்தர்கள் அலங்கார தேரை இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகளின் வழியே சென்று வந்தது. வீடுகள் தோறும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, புனித அருளானந்தர் மீது மலர் தூவியும் அருளை பெற்றனர். விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story