தஞ்சையில் முன்னாள் படை வீரர்களுக்கான "முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்

தஞ்சையில் முன்னாள் படை வீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்
X
ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், முதலமைச்சரின் முன்னாள் படை வீரர்களுக்கான 'முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது. முதலமைச்சரின் முன்னாள் படை வீரர்களுக்கான 'முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்து, பெறப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். அவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும்" என்றார்.  இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் என 110 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், முன்னள் படைவீரர் நல உதவி இயக்குநர் (ஓய்வு) மேஜர் சொ.சரவணன், முன்னோடி வங்கிகள் மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story