தஞ்சாவூர் திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழா

X
திருவையாறிலுள்ள ஐயாறப்பா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 27-ஆம் தேதி 108 கோ பூஜை, 28-ஆம் தேதி 108 திருவிளக்கு பூஜை, 29-ஆம் தேதி காவிரியிலிருந்து 5 யானைகளில் புனித நீா் ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை பரிவார மகா குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு விமானம், கோபுரம் மகா குடமுழுக்கும், 10 மணிக்கு மூலவா் மகா குடமுழுக்கும் நடைபெற்றன. தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹூதி, மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவீதியுலா ஆகியவை நடைபெற்றன.
Next Story

