சுக்காலியூர் அருகே இளநீர் கடையில் வேலை பார்த்தவரை அறிவாளால் வெட்டிய நபர் கைது.

சுக்காலியூர் அருகே இளநீர் கடையில் வேலை பார்த்தவரை அறிவாளால் வெட்டிய நபர் கைது.
சுக்காலியூர் அருகே இளநீர் கடையில் வேலை பார்த்தவரை அறிவாளால் வெட்டிய நபர் கைது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுக்காலியூர் ரவுண்டானாவில் கடந்த 10 வருடங்களாக இளநீர் கடை நடத்தி வருபவர் பாலசுப்பிரமணியன் வயது 55. இவரது கடையில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்ப்பவர் கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த கோனார் என்கிற குணசேகரன் வயது 65. இந்நிலையில் பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில், இவரது கடைக்கு வந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் பஞ்சர் கடைக்கு செல்ல வழி கேட்டார். அப்போது லாரி டிரைவருக்கு பஞ்சர் கடை செல்வதற்கு விளக்கம் அளித்து கொண்டு இருந்தார் கோனார் என்கிற குணசேகரன். அப்போது அங்கு வந்த சுக்காலியூர் அருகே உள்ள பண்டுதகாரன் புதூரை சேர்ந்த பசுபதி மகன் சின்னதம்பி என்கிற மொட்டையன் வயது 50 என்பவர், கோனார் என்கிற குணசேகரனை அறிவாலால் சரமாரியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் குணசேகரனுக்கு தலை, இடது கண் அருகே மற்றும் இடது காது அருகே வெட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக குணசேகரனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக இளநீர் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குணசேகரனை தகாத வார்த்தை பேசி,அறிவாளால் வெட்டிய சின்னதம்பி என்கிற மொட்டையனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story