ஒரத்தநாடு அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு

ஒரத்தநாடு அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு
X
கிரைம்
பொன்னாப்பூர் கிராமத்தில் உள்ள கண்டபெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு துறையுண்டார் கோட்டை கீழத்தெருவை சேர்ந்த சந்திரா (70) கூட்ட நெரிசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற மர்ம நபர் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது கழுத்தில் அணிந்து இருந்த செயின் காணாமல் போனதை கண்ட சந்திரா அதிர்ச்சியடைந்தார்.இச்சம்பவம் குறித்து சந்திரா ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story