சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா

சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா
X
சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
காங்கேயம் சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வாக கடந்த 2-ந் தேதி மாலை 5 மணி அளவில் அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் வீரகாளியம்மன் கோவில் தேர் திருவீதி உலா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாமி சிறப்பு அலங்காரத்தில் மாலை 4 மணி அளவில் வீரகாளியம்மன் தேர் பாதை, மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து சிவன்மலை கொடி மரத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணி அளவில் விநாயகர் வழிபாடும் கொடியேற்றும் விழாவும் நடைபெறுகிறது.
Next Story