திருப்பூரில் தனியார் பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள் ராஜ். கிருஷ்ணா டைம் என்ற பெயரில் வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய பெயிண்ட் மற்றும் தின்னர் வகைகளை வாங்கி ஸ்டாக் வைத்து திருப்பூர் முழுவதும் விற்பனை செய்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் இந்த குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த இன்று மதியம் பெயிண்ட் மற்றும் தின்னர் இருந்த குடோனில் உள்ள ஒரு அறையில் இருந்து தீ எரிவதை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயானது அந்த அறையில் இருந்த பெயிண்ட் மற்றும் தின்னர் கேன்களில் பரவியதை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 2 வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குடோனையில் இருந்த தொழிலாளர்கள், குடோனில் இருந்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பெயிண்டுகள் மற்றும் தின்னர்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



