குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் அபராதம்

X

அரசு செய்திகள்
தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. குழந்தை மற்றும் வளரசிளம் பருவ தொழிலாளர் முறைப்படுத்துதல் சட்டத்தின்கீழ் தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி மாதம் 151 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணியிலும், 14 வயது முதல் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகை தொழில்களிலும் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறி குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவோருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்.04362 264886 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story