குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மறியல்

X

மறியல்
உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுட்டனர். உளுந்துார்பேட்டை தாலுகா, ஆத்துார் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்க்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 3:00 மணிக்கு திருவெண்ணைநலலுார் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு பேச்சுசுவார்த்தை நடத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் வரவில்லை. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையேற்று கிராம மக்கள் 4:30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
Next Story