கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுரை

X

அறிவுரை
ரேஷன் அட்டை அச்சிடும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, கலெக்டர் பிரசாந்த் பேசினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோகத் திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.பின், அவர் பேசுகையில், 'ரேஷன் கடைகளில் சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா எனவும், பொருட்களின் இருப்பு, ரேஷன் அட்டைதாரர்களின் எண்ணிக்கை தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கார்டில் உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவேற்றம் செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மாதந் தோறும் அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புதிய ரேஷன் அட்டை அச்சிடும் பணியை விரைந்து முடித்து காலதாமதமின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்' என்றார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜீவா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story