லாரரியில் வந்த மருத்துவக் கழிவு : சிறைப்பிடித்த பொதுமக்கள்

நள்ளிரவில் லாரியில் கொண்டு வந்த மருத்துவ கழிவுகள்.செங்குன்றம் குமரன் நகர் பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்காக கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்த பொதுமக்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நள்ளிரவில் லாரியில் கொண்டு வந்த மருத்துவ கழிவுகள்.செங்குன்றம் குமரன் நகர் பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்காக கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்த பொதுமக்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தங்கரைப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக லாரிகளில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து குட்டி எரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.குமரன் நகர் அருகே நள்ளிரவில் லாரியில் கொண்டு வந்த தன் கணக்கான மருத்துவ கழிவுகளை எரிப்பதற்காக கொண்டு வந்த லாரியை மடக்கி பிடித்த பொதுமக்கள் லாரியில் இருந்த மருத்துவக் கழிவுகளை பிளேடால் கிழித்து பார்த்தபோது. ஊசி மருத்துவ கழிவுகள் மற்றும் உடைகள் என துர்நாற்றம் வீசும் வகையில் மூட்டையாக இருந்த மருத்துவ கழிவுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் பிடித்து செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் லாரி பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்த பொதுமக்கள் போலீசார் லாரியை விட்டு விடுவார்கள் என அங்கேயே காவல் காத்து வருகின்றனர். தங்கள் பகுதியில் கடந்த 3 மாதமாக விடிய விடிய குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதால். குமரன் நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் குழந்தைகள் பெண்கள் முதியோர்களுக்கு கண்ணெரிச்சல் மூச்சடைப்பு துர்நாற்றத்தால் வாந்தி மயக்கம் உள்ளிட்ட ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
Next Story