சீமான் மீது மேலும் ஒரு வழக்கு

X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது. திமுக வேட்பாளரை ஆதரித்து முத்துசாமி இறுதி கட்ட பிரசசாரம் செய்தார். இதை போல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட பிரசாரம் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆனால் கூட்டம் 5:59 மணி வரை நடைபெற்றது.இதனையடுத்து, பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 5 பேர் மீது அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரத்தில் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சீமான் மீது பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது
Next Story

