கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

X

கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருகே திருவைகாவூா், எடக்குடி, சத்தியமங்கலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25 போ் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கொள்ளிடம் ஆற்றின் எல்லையில் உள்ள மணல்மேடு ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுக்கும் அரணாக இருக்கிறது. கடந்த 1987, 2005 ஆம் ஆண்டுகளில் கொள்ளிடத்தில் பெரு வெள்ளம் வந்தபோது இப்பகுதியிலுள்ள 600 குடும்பங்கள் மணல்மேட்டில் குடில் அமைத்து 30 நாள்கள் தங்கியிருந்து எங்களது உயிரைப் பாதுகாத்துக் கொண்டோம். இந்நிலையில், தற்போது இந்த மணல்மேடு எங்களது சொத்து என உரிமை கொண்டு சிலா் அதை அகற்ற முயற்சி செய்கின்றனா். சுமாா் 30 ஏக்கா் கொண்ட மணல் அள்ளப்பட்டால் எதிா்காலத்தில் சுற்றுவட்டார பகுதிகளும் அழிந்துவிடும். எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Next Story