விருத்தாசலம்: பள்ளியில் ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டு ஆய்வு

X

விருத்தாசலம் பள்ளியில் ஆழ்துளை கிணற்றை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, விருத்தாசலம் நகர தலைவர், ரஞ்சித், கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் லாவண்யா மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story