ரைஸ் மில்லில் மெஷினின் சக்கரத்தில் புடவை சிக்கி

X

படுகாயம் அடைந்த இளம் பெண்ணின் 2 கால்கள் அகற்றம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருங்கண்ணி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பா. இவரது மனைவி செல்வி (37). இவர் நேற்று முன்தினம் மாலை மிளகாய் தூள் அரைப்பதற்காக அருகிலுள்ள ரைஸ் மில்லுக்கு சென்றார். அப்போது அங்கு இயங்கிக் கொண்டிருந்த மெஷினில் உள்ள சக்கரத்தில் செல்வியின் புடவை மாட்டி இழுத்துக் கொண்டது. இதில் தூக்கி எறியப்பட்ட செல்வி படுகாயம் அடித்தார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம், ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், செல்வியின் 2 கால்களையும் அகற்றினால் தான் அவர் உயிர் பிழைப்பார் என்று கூறினார். அதன் பேரில், செல்வியின் உறவினர்களின் ஒப்புதலுடன் அவரது இரண்டு கால்களும் அகற்றப்பட்டது. இது குறித்து, வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story